சிறுபான்மை முஸ்லிம் மீது வெறுப்பு விதைத்து கல்லா கட்டி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார்
மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை ஆற்றினார்
வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் மற்றும் மாநில செயலாளர் ரத்தினம் அண்ணாச்சி ஆகியோர் அமரன் திரைப்படத்த தடைசெய்யக்கோரி
கண்டன கோஷங்கள் எழப்பினர்
இறுதியாக தெற்கு தொகுதி தலைவர் பாட்ஷா நன்றியுரை ஆற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்






