ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் கிராமத்தில் சுமார் நூறு அடி கிணற்றில் ஆட்டை காப்பாற்ற சென்றவர் கிணற்றில் விழுந்தார் தீயணைப்பு துறை போராடி உயிருடன்மீட்கப்பட்டனர்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமாக சுமார் 100 அடி கிணறு உள்ளது இந்நிலையில் இன்று சுமார் 5 மணி அளவில் ஒரு ஆடு தவறி கிணற்றுக்குள் விழுந்தது இதனை காப்பாற்ற அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா சாலை கிராமத்தைச் சேர்ந்த மரிய பிரகாசம் மகன் அருள் ஜோசப் வயது 30 கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை காப்பாற்ற முயன்ற போது தவறி நூறு அடி ஆழத்தில் விழுந்துள்ளார் இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு
துறையினருக்கு தகவல் கொடுத்தனர் இதன் அடிப்படையில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு அருள் ஜோசப்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் போராடி மீட்டனர் பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்இதனால் இப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.






