திருச்செந்தூர், நவ.08 முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழாவாகும்.அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.அன்று முதல் கோவிலில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பக்தர்கள் விரதம் இருந்துவந்தனர்.விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு,மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜை, யாகசாலையில் உள்ளசுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை,பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல்,மாலையில் சுவாமி,வள்ளிதெய்வானை அம்பாள்களுடன் திருவாவடு துறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் சுவாமி அம்பாள்களுடன் அலங்கரிக்கப் பட்டதங்க ரதத்தில் கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை(7-ந்தேதி) கோவில் கடற்கரையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.முருகப் பெருமானான சுவாமி ஜெயந்திநாதர்,சூரனை வதம் செய்வதற்காக வென்பட்டு உடுத்தி, வெட்டி வேர்மயில் தோகை மாலை அணிந்து கடற்கரைக்கு வருகை தந்தார். முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகம் கொண்டதாரகா சூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக,அவரை மூன்று முறை சுற்றிவந்து சுவாமிக்கு எதிராக நின்றான். 4.54ம ணிக்கு முருகபெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார் அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்க முகாசூரன்,முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றி வந்து, நேருக்கு நேர்போரிட தயாரானான்.5.09மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருக பெருமான் வேலால் சம்ஹாரம் செய்தார்.தொடர்ந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வந்தான்.தொடர்ந்து 5.22 மணிக்கு முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார்..இறுதியாக மாமரமும்,சேவலுமாக உருமாறி வந்தசூரபத்மனை முருகபெருமான் சேவலும்,மயிலுமாக மாற்றிஆட்கொண்டார் .சேவலை தனது கொடியாகவும்,மயிலை வாகனமாகவும் வைத்து கொண்டார்.கடற்கரையில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம்,வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானபக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். கந்தசஷ்டிவிழாவை யொட்டி ,விரதம் இருந்த பக்தர்கள், திருச்செந்தூரில் தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரம் நிகழ்ந்த போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ போன்றபக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கிசாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி,கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்புவேலி அமைக்கப்பட்டு இருக்கிறது.4,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருக்கல்யாணம்..7ம்திருநாளான இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும்,4மணிக்கு உதய மார்த் தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. 5.3 மணிஅளவில் தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார்.காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமிகாட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு சுவாமிக்கும்,தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்களின் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’…. கோஷம் விண்ணதிர… திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹாரம்… ஆணவ மாயையை அழித்து ஆட்கொண்ட முருகன்.






