புனித அந்தோனியார் கோயிலில் 33-ம் ஆண்டு திருதேர் பவனி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீடுதோறும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு

புனித அந்தோனியார் கோயிலில் 33-ம் ஆண்டு திருதேர் பவனி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீடுதோறும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு :-

  • மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது. நத்தம் கிராமம்..

    இங்கு அண்ணா நகரில் மிக பழமையான புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்து – உள்ளது. இக்கோயிலில் 33 வது ஆண்டு திருத்தேர் பவனி நடைபெற்றது இந்த ஆண்டு, புனித அந்தோணியார்

    குழந்தை இயேசு மாதா
    புனித செபஸ்தியார் ஆகிய சுருபங்கள் மந்திரிக்கப்பட்டு ஊர்வலமாக கிராமங்களில் வீதிகளில் வலம் வந்தனர் இவ் ஆலய பங்கு தந்தை
    மரியதாஸ் பக்தர்களுக்கு, புனித நீர் தந்து,, ஆசிர்வாதம் செய்தார் கிராம நாட்டாமை பஞ்சாயத்து அவர்கள் ஏற்பாட்டில்
    பாட்டு கச்சேரி ஆடல் பாடல், வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் புனித அந்தோனியர் திருசப்பரத்தில் எழுத்தருளி வீதியுலா வந்தார் .அப்போது அந்த பகுதிகளில் வாழும் , கிருஸ்துவர் மற்றும் இந்து, , முஸ்லிம் சமயத்தை சார்ந்த மக்கள், மெழுகுவர்த்தி ஏந்தி புனித அந்தோனியாரை வழிபட்டும் திருத்தேர் பவனியில் கலந்து கொண்டு கிருஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு குளிர்பானங்கள் கொடுத்தும் — புனித அந்தோனியாரை வழிபட்டனர் – இது காண்போரை கண்கவர்ந்தது மட்டுமல்லாது, தமிழகத்தில், சாதி மத பேதமற்ற சமுதாயம் உள்ளது என உலகுக்கும் உணர்தியது வியப்பிற்குரிய தாகும்.