சேரன்மாதேவியில் விநாயகர் விஜர்சன விழா
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. விநாயகர் சிலைக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று விநாயகர் சிலையை விஜர்சனம் செய்ய உவரி கடற்கரைக்கு கொண்டு சென்றனர். முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை வக்கீல் பழனிகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் கூனியூர் மாடசாமி, இந்து மக்கள் கட்சி செல்வகுமார், ராதாகிருஷ்ணன், முருகன் நயினார், மகாராஜன், இசக்கிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






