கார் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் லாரியும் ஓட்டலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புது­டெல்லிநவ.7 இல­கு­ரக மோட்­டார் வாகன (LMV) லைசன்ஸ் வைத்­தி­ருக்­கும் நபர்­கள் 7,500 கிலோ எடைக்கு மிகா­மல் இருக்­கக்­கூ­டிய போக்­கு­வ­ரத்து வாகனத்தை ஓட்­டு­வதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதி­மன்­றம் இன்று தீர்ப்­ப­ளித்­தது.கார் உள்­ளிட்ட 4 சக்­கரவானங்­களை ஓட்­டு­வதற்கு இல­கு­ரக மோட்­டார்வாகன (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்­டும். அதே சம­யம் லாரி போன்ற பெரிய கன­ரக வாகனங்­களை ஓட்­டு­வதற்கு கன­ரக மோட்­டார்வாகன (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்­டும். இல­கு­ரக மோட்­டார் வாகன லைசன்ஸ் (LMV) பெற்­றவர்­கள் போக்­கு­வரத்து வாகனங்­களை ஓட்டி விபத்து ஏற்­பட்­டால், விபத்து காப்­பீட்டு வழங்­கு­வ­தில் பல்­வேறு சட்­ட­சிக்­கல்­கள் இருந்து வரு­கி­றது. இது தொடர்­பான வழக்கு தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் தலைமை­யி­லான 5 நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு விசா­ரித்­தது. அப்­போது நாட்­டில் சாலை விபத்­து­கள் அதி­க­ரிப்­பதற்கு LMV லைசன்ஸ் வைத்­தி­ருப்­பவர்­கள் கார­ணம் என்­பதற்கு எவ்­வித ஆதா­ர­மும் இல்லை. ஆகவே LMVலைசன்ஸ் வைத்­தி­ருப்­பவர்­கள் 7,500 கிலோ எடை வரை­யுள்ள போக்கு­வ­ரத்து வாகனங்­களை ஓட்­ட­லாம் என்று தீர்ப்­ப­ளித்­தது.இந்ததீர்ப்­பினை அடுத்து,விபத்து தொடர்­பான இன்­சூ­ரன்ஸ் வழக்கு­க­ளில் காப்­பீடு செலுத்­து­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக நீதி­மன்­றங்­கள் செயல்­படு­கின்­றன என்று காப்­பீட்டு நிறு­வனங்­கள் குற்­றம் சாட்­டின.