சென்னை:ஜூன்.30 – ரூ.47.50 கோடி செலவில் மேம் படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து, ரூ.207.90 கோடி மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பேருந்து கள் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று போக்குவ ரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர் போக்குவ ரத்துக்கழகத்தின் 47.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப்பேருந்து பணிமனையை திறந்து வைத்தார். மேலும்,சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்து கள் இயக்கத்தைகொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து பணிமனை சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படை யில் (சிசிறி-ஷிஹிஷிறி),உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்ட மைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன்,சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படஉள்ளது. வியாசர்பாடி,பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி,மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட ஐந்து பணிமனைகள் மூலம் மொத்த விலை ஒப்பந்தத் தின் அடிப்படையில் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கு,உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மதிப்பீடு 697.00 கோடி ரூபாய் ஆகும்.இதன் தொடர்ச்சியாக,தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பணிமனைகளிலும், உரிய
கட்டட உட்கட்டமைப்பு, மின்னேற்றம் (சிலீணீக்ஷீரீமீக்ஷீ) செய்வதற்குரிய கட்டுமான பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாகக்கட்டடம், பணியாளர்கள் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டும், புதியமின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற அனைத்து பணிகளும் நடை பெற்று வருகிறது.ஒருமுறை சார்ஜ் செய்தால் குளிர்சாதனமில்லா பேருந்து 200 கி.மீ. இயங்கும். மேற்படி அனைத்துப் பணிகளும் நிறை வுற்று தமிழ்நாட்டிலேயே போக்கு வரத்துக் கழகங்களில் முதல் முறை யாக வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனை47.50கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் திறந்து வைக்கப் பட்டது.120 புதிய தாழ்தளமின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை பொது மக்களின் பயன் பாட்டிற்காக தொடங்கி வைத்தல் தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால் போக்குவரத்தில் பசுமை இல்லா வாயு உமிழ்வு அதிகளவு வெளி யேறுகிறது. குறிப்பாக 2005 – 2019 காலகட்டத்தில்10 மில்லியன் டன் சிளி₂-லிருந்து 27மில்லியன்டன் சிளி₂ வரை கார்பன் வெளியேற்றம் மூன்று மடங்காகஅதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை மின்மய மாக்குவதன் மூலம் பசுமை இல்லா வாயு உமிழ்வை அதிகரிப்பதை தடுக்கவும்,சமன் செய்யவும் முடியும். மேலும், ஒவ்வொரு டீசல் பேருந்தும் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 755 கிராம் கார்பன் டை ஆக்சைடு (சிளி₂) வெளியிடுகிறது.மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வைகுறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம் படுத்தலாம்.சென்னையில் சுற்றுச் சூழல்மாசுபாட்டை குறைக்கும்
நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப்பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் அவர்கள் கொடிய சைத்து தொடங்கிவைத்து, பேருந்தினை பார்வையிட்டார். பின்னர் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் களிடம் கலந்துரையாடினார்.
சென்னையில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!






