நாகை _- இலங்கை கப்பல் சேவை ஐந்து நாட்களாக அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நாகை:நாகப்­பட்­டி­னம் -இலங்கை காங்­கேசன் துறை இடை­யி­லான பய­ணி­கள் கப்­பல் போக்­கு­வ­ரத்து இனி வாரத்­தில் 5 நாட்­க­ளுக்கு இயக்­கப்­ப­டும் எனகப்­பல் போக்­கு­வ­ரத்து நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பய­ணி­கள் கப்­பல் சேவை தொடங்­கி­யது.முத­லில் தினந்­தோ­றும் இரு மார்க்­கத்­தி­லும் இயக்கப்­பட்ட நிலை­யில் பயணி­கள் முன்­ப­திவு குறைவாக இருந்­த­தால் வாரத்­தில் செவ்­வாய், வியா­ழன்,ஞாயிறு மூன்று நாட்­க­ளாக குறைக்­க ப்­பட்டு இயக்­கப்­பட்­டது.அதன் பின்­னர் சனிக்­கி­ழமை உட்­பட்ட 4 நாட்­க­ளாக நீட்­டிக்­கப்­பட்­டது. இது பய­ணி­க­ளி­டையே நல்ல வர­வேற்பை பெற்று முன்­ப­தி­வும் அதி­க­ரித்­துள்­ளது. அதைத்­தொ­டர்ந்து இனிவாரத்­தில் 5 நாட்­கள் கப்­பலை இயக்க கப்­பல் நிர்­வா­கம் முடிவு செய்­துள்ளது. அதன்­படி பய­ணி­கள் வசதிக்­காக எதிர்­வ­ரும் 8ம்தேதி முதல் வெள்­ளிக் கிழ­மைக­ளி­லும் கப்­பல் போக்கு­வ­ரத்து சேவை இருக்கும் என ‘சிவகங்கை’கப்­பல் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.இத­னால் சுற்­று­லாப் பயணி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.