தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைகுறிச்சி கோட்டத்தில் திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் மற்றும் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அவர்கள்

உத்திரவின் படியும் , கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியார் மேல்நிலை பள்ளி, சேரன்மகாதேவியில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர், சேரன்மகாதேவி திரு. சந்திரன், உதவி மின் பொறியாளர் திரு. கைலாசமூர்த்தி, சமூக ஆர்வலர் திரு. நைனா முகம்மது, சேரன்மகாதேவி மின் வாரிய பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு மின் பாதுகாப்பு பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கி கௌராவிக்கப்பட்டது.






