திட்டக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே. மகாலட்சுமி வேட்புமனு தாக்கல்
திட்டக்குடி, மார்ச் 30:
திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வே. மகாலட்சுமி அவர்கள் இன்று (30.03.2026) வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனித்துவமான முறையில் பங்கேற்றனர். அவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் புகைப்படம் பதிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வழக்கறிஞர், மருத்துவர், காவலர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை பிரதிபலிக்கும் வேடங்களில் ஆதரவாளர்கள் தோன்றினர். அதேசமயம், விவசாயி ஏர் கலப்பை ஏந்தியவாறு கலந்து கொண்டு, “எந்தத் துறையில் பணி செய்தாலும், நாம் தினமும் உண்பதற்கான உணவிற்கு விவசாயி அவசியம்” என்ற செய்தியை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.
திட்டக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே. மகாலட்சுமி வேட்புமனு தாக்கல்






