முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்த நாள் விழா

கூனியூர்:
1.03.2026.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்த நாள் விழா கூனியூர் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சிக்கு தொ.மு.ச. துணைப் பொதுச் செயலாளர் எம். கணேசன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் இரா. பழனி, செயலாளர் டி. ஜெயக்குமார், பொருளாளர் ஆர். முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எம். ரோலி லாரன்ஸ், கே. முத்து குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

மேலும் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். இசக்கி முத்து, எம். மாரியப்பன், சுரேஷ், ராமசாமி, சேர்மன் துரை, கந்தன், நம்பிராஜன், பெரியசாமி, பூதத்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக சேரை நகர செயலாளர் M.மணிசா செல்வராஜ் மற்றும் கூனியூர் பஞ்சாயத்து தலைவர் M. முத்துகிருஷ்ணன், பொறியாளர் அணி E. இசக்கிமுத்து பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி நிறைவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழா உற்சாகமாக நடைபெற்றது.