போதைப்­பொ­ருள் கடத்­தல்- எடப்­பாடி பழ­னி­சாமி கண்­ட­னம்

சென்னை, செப், 28 அதிமுக பொதுச்செய­லாளரும் எதிர்க்கட்சி தலை­வருமான எடப்­பாடி பழனிசாமி வெளியிட்­டுள்ள எக்ஸ் பதிவில்,சென்னை துறை­மு­கத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ சூடோஎபிட்­ரின் என்ற போதைப்­ பொ­ருளைமத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதி­கா­ரி­கள் பறிமு­தல் செய்­துள்­ள­னர் என்ற செய்தி­கள் ஊட­கங்­களில் வந்துள்­ளன.போதைப்­பொ­ருட்­களின் கேந்திரமாக தமிழ­கம் மாற்­றப்­பட்­டுள்­ளதற்கு காரண கர்த்­தாக்­கள் யார்? சூத்­ர­தாரி­கள் யார் யார்? என்­பது நன்கு தெரிந்திருந்­தும், ஆணி­வேர் எங்கிருக்கி­றது என்று தெரிந்தி ருந்தும், அவர்­கள்மீது சட்­டத்தின் இரும்புப்­பிடி நீளா­மல், கடத்­தலில் ஈடுப­டும், குருவி­கள் என்­ற­ழைக்­கப்­ப­டும், சிறு சிறுகடத்­தல் வேலை செய்­யும் ஒருசி­லரை மட்­டும்மத்திய வருவாய் புலனாய்வுத் துறை­யினர் பிடிக்­கும் மர்­மம்­என்ன? தொடர்ந்து இது­போன்ற போதைப்பொ­ருள் கடத்­தல், விற்பனை தொடர்ந்­தால்,தமிழக இளை­ஞர்­கள் மட்­டுமல்ல, இந்தியாவின் எதிர்­ கா­லமே பாழா­கும் என்­பதை நினை­வில் நிறுத்தி போதைப்­பொ­ருள் கடத்­தல் குற்­ற வாளி­கள் மீது சம்­பந்­தப்­பட்ட மத்­திய, மாநில காவல்­துறை அதி­காரி­கள் சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வலியுறுத்து­கி­றேன் என்று தெரிவித்துள்­ளார்.