புதுடெல்லி, நவ. 2 கடந்த 1956-ம் ஆண்டுநவம்பர் 1-ந்தேதி ஆந்திரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா,தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.பஞ்சாப் மற்றும் அரியானா 1966-ல் பிரிக்கப்பட்டது.சத்தீஸ்கார் 2000-வது ஆண்டில் மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநிலம் வேறு மாநிலத்தில் இருந்து பிரிந்த தினத்தை அவரது மாநிலம் இனமாக கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் இன்று மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரவுபதி முர்மு தனது ‘எக்ஸ்’தளபதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மக்கள் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் தொடர்ந்து பங்களிக்கவும் அவர்களின் வாழ்க்கை அமைதி மற்றும், செழிப்புடன் அமைய வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.அனைத்து மாநில மக்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வாழ்த்துகிறேன் எவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மாநிலங்கள் உருவான தினம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து.






