சென்னை : தொழில் 4.0 தொழில் நுட்பமையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவ,மாணவியர்கள் மற்றும் பயிற்றுநர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சென்னை தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை( அக்24 ) தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில்,இந்திய அளவில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் முதலிடம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த 29 மாணவ , மாணவியர்களும் மற்றும் காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர் ஒருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.முதல்வரின் வழிகாட்டுதலின் படி,தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி
நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாகதரம் உயர்த்தப்பட்டன. தொழிற்
பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து
மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது.2023-2024-ஆம் கல்வியாண்டு தேர்வு 1 2.0 8. 20 2 4 முதல் 9.09.2024 வரை நடைபெற்றது.இந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் மற்றும் 1 9 , 0 9 7 தனியார் தொழிற் பயிற்சி மாணவ,
மாணவியரும் என மொத்தம் 45,333 மாணவ மாணவியர்பங்கேற்றனர்.
அகில இந்திய தொழிற் தேர்வில் 29 மாணவ, மாணவியர் முதலிடம்: முதல்வரை சந்தித்து வாழ்த்து!






