நாகர்கோவில் அக் 15, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெரும் பணிகளுக்கு பாராளுமன்ற நிதி ஒதுக்கி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நேற்று அடிக்கல் நாட்டினார்.நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது வார்டு சென்ன வண்ணான் விளையில் ரூ. 13லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் ,பட்டகசாலியன் விளையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை குடிநீர்கிணறு மற்றும் மின்மோட்டார் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.அடுத்து வார்டு எண் 33க்கு உட்பட்ட குருசடி ஊருக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். அடுத்து வார்டு எண் 32 வடக்கு கோணத்தில் ரூபாய் 10லட்சம் நிதி ஒதுக்கி ஆற்றுப் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அதனை தொடர்ந்து 37வது வார்டு வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டித்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் குமரிகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மேயருமான ரெ. மகேஷ், துணைமேயர் மேரி பிரின்ஸிலதா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாகர்கோயில் மாநகரம், மற்றும் மாநகராட்சி 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஜெ.எஸ் . நவீன்குமார், மண்டல தலைவர் ஜவஹர், தலைமைச்செயற்குழு உறுப்பினர் சதாசிவன் , மற்றும் காங்கிரஸ்கட்சி நிர்வாகிகள் முருகேஷ் , சந்திரசேகர், தங்கராஜ் , பாபு, ராதாகிருஷ்ணன், அன்பரசன், தங்கதுரை, முருகன்,நடேசன்,ஜெயபால்,மணிகண்டன், ஐயப்பன், கோபால், ரதன் , ரவிக்குமார்,செந்தில்குமார்,ஹரிஷ் லிங்கேஸ்வரன்,சுதன், உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற நிதி மூலம் நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி, புதிய கட்டிடங்களை திறந்து வைப்பு!






