மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 A(H) பிரிவு விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் 1.9. 2024 அன்று மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(H) பிரிவு விளக்கப் பொதுக்கூட்டம், மற்றும் மண்டல குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே கலைவாணர் திடலில் நடைபெற்றது.
கூட்டத்தில் திராவிட கழக சேரை ஒன்றிய தலைவர் செல்வசுந்தரசேகர் வரவேற்புரை யாற்றினார். திராவிட கழக மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திராவிட கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு ரா.குணசேகரன் மற்றும் திருநெல்வேலி திராவிட கழக காப்பாளர் வேலாயுதம், ரா. காசி தென்காசி டேவிட் செல்லதுரை, தூத்துக்குடி சு.காசி,பால் ராசேந்திரன், கன்னியாகுமரி கிருட்டினசுவரி ஆகியோர் முன்னிலையிலும், திராவிட கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் இணைப்புறையிலும், திராவிட கழக மாவட்ட செயலாளர் ரா வேல்முருகன் தொடக்க உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மண்டல குழுவும் திராவிட கழகம் உலக தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு என்ற நூலை வெளியிட்டார் அதன் முதல் நூலை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா. ஆவுடையப்பன் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்
மற்றும் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.முத்து கிருஷ்ணன், வீரவநல்லூர் நகர திமுக செயலாளர் வீ. சுப்பையா, காங்கிரஸ் நகர தலைவர்கள் லட்சுமணன், சிதம்பரம், மதிமுக நகர செயலாளர் மலைக்காந்தி, சேரை ஒன்றிய செயலாளர் CPI(M) பால சுப்பிரமணியன், CPI சேரை ஒன்றிய செயலாளர் பா. முருகன், இந்திய முஸ்லிம் லீக் தலைவர் சுல்தான், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் முகமது ரிபாய்,மனிதநேய மக்கள் கட்சி நவாஸ், சேரை மக்கள் நல இயக்கம் சிவராஜ் மற்றும் பங்கேற்ற வீரவநல்லூர் திமுக கழக நிர்வாகிகள் அவை தலைவர் ரா பழனி ,பொருளாளர் முத்துக்குமார், துணை செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி அப்பு குட்டி, அண்ணாதுரை, பேரூராட்சி மன்ற தலைவர் சித்ரா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்த சந்திரா, துணை செயலாளர் விசாலாட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரி, சண்முகவேல் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சுபாஷ், கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ராமையா தேவர், நெல்லையப்பன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் வீரவநல்லூர் திராவிடர் கழகம் நகர தலைவர் மா.கருணை நிதி நன்றியுரையாற்றினார்.
மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 A(H) பிரிவு விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா.






