*தனியார் மருத்துவர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய எக்ஸ்ரே கருவியால் பொதுமக்கள் மகிழ்ச்சி*
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது
இந்த மருத்துவமனையில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள்
சிகிச்சை வருகின்றனர்
இந்த நிலையில் உள்நோயாளிக்காக 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெளி நோயாளிகளாக பல்வேறு கிராமங்களில் இருந்து தினசரி 500க்கும் மேற்பட்டோர் இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் பொது மக்களுக்கு எக்ஸ்ரே எடுக்க மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில்
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பரிந்துரை பெயரில் தனியார் மருத்துவமனை மருத்துவர் அன்பளிப்பாக எக்ஸ்ரே கருவியை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழக்கினார்
அதன் துவக்க விழா மருத்துவ வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே அருகில் நடைபெற்றது வட்டார
மருத்துவ அலுவலர் வெங்கடேசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மருத்துவர் முகமது முஜீபில் ஆயங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் மற்றும் முகமது ஆசிப் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் .c நிகழ்ச்சியில் பங்கேற்றனர்






