காந்தி ஜெயந்தி முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!…

அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சத்தந்தை காந்தியின் பிறந்த நாளையே நாம் காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம். இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தி மிகவும் முக்கியமானவர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும், சமூகத்தில் இருந்த தீண்டாமைக்கு எதிராகவும் அகிம்சை என்னும் அமைதி ஆயுதம் கொண்டு போராடி, அதில் உலகம் வியந்து பார்க்கும் வெற்றியையும் பெற்றவர் காந்தி. நாம் மட்டும் இல்லை உலக நாடுகளும் இந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடி வருகிறது அதே போன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காந்தி பூங்காவில் காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நகரத் தலைவர் பொன்ராஜ் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் கவுன்சிலர் முருகன் ரவிச்சந்தர் முன்னிலை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது,இதில் நகரச் செயலாளர் காஜா மைதீன், நகரப் பொருளாளர் சேக் செய்யத் அலி, கூனியூர் ராஜேஷ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவுன்சிலர் ஆனி,வார்டு செயலாளர் மாரியப்பன், உறுப்பினர் பனி மையம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.