முதுகுளத்­தூர் அருகே கண்­மா­யில் கிடந்த ஆப்பிரிக்க கெளுத்தி மீன்­கள் அழிப்பு!

இராம­நத­பு­ரம் அக்,21    இராம­நா­த­புரம் மாவட்டம், முதுகு­ளத்தூர் அருகே செல்­வ­நாயகபு­ரம் கிரா­மத்தில் உள்ள பொதுக் குளத்தில்,கடந்த ஆண்டு மழை­நீ­ரில் அடித்து வரப்­பட்ட ஆப்பிரிக்க கெளுத்திமீன்­கள் அதிக­ள­வில் வளர்ந்து காணப்­பட்­டது இத­னால், கண்­மா­யில் வள­ரக்கூடிய நாட்டு நன்­னீர் மீன்­கள் உற்­பத்தியாக­வில்லை. இந்­நி­லை­யில்,தண்ணீர் வற்­றியது சேற்றில் கிடந்த2000 கிலோ ஆப்பிரிக்க கெளுத்திமீன்­களை செல்­வ­நாயக்­கபுரம் கிரா­மத்­தைச்சேர்ந்த இளை­ஞர்­கள் பிடித்­தனர்.இந்த கெளுத்தி மீன்­கள் ஒவ்வொன்றும் ஐந்துகிலோ­வுக்கு மேல் எடைஇருந்­தது.பின்­னர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டிபுதைத்து அழித்­தனர்.ஆப்பிரிக்க கெளுத்திமீன்­களை வளர்க்க மத்­திய,மாநில அரசுகள் தடைவிதித்துள்­ளன.இந்த மீன்­கள் காற்றை சுவாசிக்கும். இவை இடை­வி­டா­மல் மீன்­களை வேட்­டை­யாடி உண்ணும் திறன் கொண்­டவை.மேலும் 8 வரு­டங்களுக்கு மேல் வாழலாம் இந்தமீன்­கள் நீர் நி­லை­களுக்குள் நுழைந்­தால், அவற்றை ஒழிப்­பது கிட்­டத்­தட்ட சாத்திய­மற்­றது. மேலும்,இந்த மீன்­கள் மிகக்குறைந்த நீரில் இனப்­பெருக்­கம் செய்­யும் திறன் கொண்­டவை. ஆப்பி­ரிக்க கெளுத்தி மீன்­கள் நன்னீர் மீன் இனங்­கள் மற்­றும் அவற்­றின் முட்டை­களை உண்­ப­தால் நமது பாரம்­பரிய மீன்இனங்­கள் அழிந்து வரு­கின்­றன. இந்த மீன்­களை பண்ணை குட்­டை­கள் அல்­லது மீன் வளர்ப்பு குட்­டை­களில் வளர்த்­தால், மழை மற்­றும் வெள்­ளத்தின் போது குளங்­க­ளில் இருந்து தப்­பிக்கும் வாய்

ப்பு உள்­ளது. ஏரி மற்­றும் ஆறுக­ளில் வெளி­யேறிமற்ற மீன் இனங்­களை அழிக்­கும்ஆப்பிரிக்க கெளுத்தி,மீன்­க­ளைத்தவிர மற்றபாரம்­பரிய மீன் இனங்கள் அழிந்­துவிடும்.எனவே, தடை­செய்­யப்­பட்ட ஆப்பிரிக்ககெளுத்தி மீன் வளர்ப்­பதுதடை­செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த உத்­தரவை மீறி ஆப்பிரிக்க கெளுத்திமீன்­கள் வளர்க்­கப்­பட்டால், அவர்­கள் மீது கிரி­மினல் நட­வடிக்கைஎடுக்­கப்­படும்.மேலும்மீன் வளர்ப்பில் ஆர்­வம் உள்ள மீன் வளர்ப்­போர்,மீன்­வ­ளத்து­றை­யின் ஆலோ­ச­னை­களை பெற்று, அரசால் அங்­கீக­ரிக்­கப்­பட்ட மீன்­களை வளர்க்க வேண்டும்.