முதுகுளத்தூரில் வெறி நாய் தொல்லை அச்சத்தில் பொது மக்கள்!

இரா­மநா­தபுரம், செப், 8 இர­ம­நா­தபுரம் மாவட்­டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள சுவா­மி­கள் மடத்து தெரு, வடக்கூர் நடுத்­தெரு, அலியார்தெரு, மொச்சிகுலத்­தார் தெரு, வீர­கா­ளியம்­மன் கோவில் தெரு, முக­ம­தியார் வடக்கு தெரு, மறவர் தெரு, வக்கீல் ராமலிங்­கம் பிள்ளை தெரு, பெரிய பள்ளிவாசல் தெரு, அய்யனார் கோவில் தெரு,நாடார் தெரு, ஆகிய தெருக்­க­ளிலும் குறிப்­பாக பேருந்து நிலை­யத்தை ஒட்டியபஜார் தெருவில் நாய்­களின் தொல்லை நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு முக்கிய காரணம் வேர ஊர்­க­ளில் இருந்து பிடிக்­கப்­பட்டn நாய்­களை முதுகுளத்தூர்பேரூராட்சி பகுதியில் விட்டு சென்­ற­தாக கூறப்படுகிறது இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் வீட்டின் அருகே கட்டி இருக்கும் கால்நடைகளையும் தெருவில் சுற்றி தெரியும் வெறி நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதனால் பொது மக்­கள் வெளியே செல்ல முடியா­மல் வீடு­க­ளில் முடங்கும் சூழ்­நிலை ஏற்ப­பட்டுள்­ளது.ஆகை­யால் தெருவில் உள்ள பொது மக்­க­ளிடம் விசா­ரித்து எந்த பகுதியில் நாய் தொல்லை அதி­க­மாக உள்­ளது என கண்­ட­றிந்து பேரூராட்சி நிர்­வா­கம் உடனடியாக அந்த தெருக்­க­ளில் சுற்றும் வெறி நாய்­களைபிடிக்க தேவை­யான நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்­பாக வெளியூர்க­ளில் பிடிக்­கப்­பட்ட நாய்­களை முதுகுளத்தூர்நகர் பகுதியில் விடக்கூடாது என்று பொதுமக்­களும் சமூக ஆர்வலர்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.