ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராமநாதபுரம், மார்ச் 27:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சிம்ரன் ஜுத்சிங் காலோன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, வாக்கு எண்ணும் பணிகள் சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு முறைமைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மேலும், வாக்கு எண்ணும் நாளில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






