சென்னை, அக்.14 வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு நிலை
(புயல் சின்னம்) உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3
நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் நாளைமுதல் வட கிழக்கு பருவமழையும் முறைப்படி
தொடங்க உள்ளது.இந்த தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் 1ல் தொடங்கி செப்டம்பர் 30–ல் முடிவடையும். இந்தஆண்டு மே கடைசியில் தொடங்கிவிட்டது. செப்
டம்பர் 30–ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது.இந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக மழை பெய்
துள்ளது.இந்த மழைக்காலம் முடிந்த பிறகு சிறிது இடைவெளி விட்டு வட கிழக்கு பருவமழை தொடங்கும்.பொதுவாக அக்டோபர் 20–ஆம் தேதி இந்த மழை பெய்யத் தொடங்கும். ஒரு சில வருடங்களில் ஓரிரு நாட்கள் முந்தும் அல்லது பிந்
தும். ஆனால் இந்த ஆண்டு வெகு நாட்களுக்கு முன்னரே நாளை முதல் வடகிழக்கு பருவமழை
தொடங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழையைப்போல இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் சராசரியை விட கூடுதலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்
துள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அதிக
மழை இருக்கும்.வட கிழக்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும் வகையில் கடந்த சில தினங்களா கவே அதற்கேற்ற சூழல் நிலவி வந்தது. காற்றின் சுழற்சி காரண மாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பலத்த மழை பெய்துவந்தது. நேற்று முன்தினம் இரவில் கோவையில் மிக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அதைப்போல மதுரையில் 4 மணி
நேரத்தில் 16செ.மீ. அளவுக்கு மழை
பெய்துள்ளது. இதன்காரணமாக அந்த 2 ஊர்களிலும் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.இந்த நிலையில் வங்கக்கடலில் 14–ஆம் தேதி(இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று நேற்று முன்தினம் வானிலை ஆய்வு
மையம் கணித்திருந்தது. அதற்கேற்ப இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை(புயல் சின்னம்) உருவாகி உள்ளது.இது படிப்படியா க மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழ்நாடு –தென்ஆந்திரம் கடலோரப்பகுதியில் நிலை
கொள்ளும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.இதன்காரணமாக
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவள்ளூர்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், சில உள் மாவட்டங்களிலும் நாளை முதல் 17–ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று புயல் சின்னம் உருவானது!






