சேரன்மகாதேவி,
19.01.26
சேரன்மகாதேவியில்புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயர் சூட்ட சார் ஆட்சியரிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சேரன்மகாதேவியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளன.
ரயில்வே மேம்பாலத்திற்கு இந்திய அரசியலமைப்பின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும். பேரூராட்சியின் தென்பகுதியில் பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், மற்றும் அனைத்து சமூக மக்களும் வசிக்கின்றனர். தென்பகுதியில் அமைந்துள்ள ஒன்பது வார்டுகளில் ஐந்து வார்டுகளில் பட்டியலின மக்களின் உறுப்பினர்களே உள்ளனர்.
எனவே அரசு ரயில்வே மேம்பாலத்திற்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயர் சூட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் J. தினேஷ், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொருளாளர் M. சிவராஜ்,பகுஜன் சமாஜ் கட்சி அம்பை சட்டமன்ற பொருளாளர் S. ரஞ்சித்,பகுஜன் சமாஜ் கட்சி நெல்லை பாராளுமன்ற பொறுப்பாளர் சித்தார்த் சி.வாசன், பகுஜன் சமாஜ் கட்சி Ex மாவட்டத் தலைவர் G. பிரபு காளிதாஸ், பகுஜன் சமாஜ் கட்சி அம்பை Ex சட்டமன்ற வேட்பாளர் M.மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.






