முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம்

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம்

தமிழக வெற்றி கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏர்போர்ட் பகுதி கழகத்தின் சார்பில் 65வது வார்டு புதுத்தெரு பகுதியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

வட்டச் செயலாளர் காளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 500 பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொறுப்பாளர் சௌகத் மற்றும் ஏர்போர்ட் பகுதி செயலாளர் செந்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும், வட்ட துணைச் செயலாளர் சாரதி, வட்ட நிர்வாகிகள் ரீகன், மதன்குமார், விவேக், நவீன், டேவிட், பிருத்வி, பார்த்திபன், அருள்ராஜ், ஜார்ஜ், ஆகாஷ், கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல், 65வது வார்டு மகளிர் அணி நிர்வாகிகளான எலிசபெத், நெகோமியா, கௌசியா, சாவித்திரி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.