சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்பர் நாயக்கர் சிலை, அரங்கம்: ஸ்டாலின் திறந்தார்

சென்னை, அக்.10 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்,செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் பூலித் தேவன் படைத்தளபதி வெண்ணிகாலா டிக்கும், சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய்க்கும்,  தலா 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலைகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் ஆகியவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.இன்றைய தினம் முதலமைச்சரால்  திறந்து வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகத் திருமக்களான வெண்ணிகாலாடி , வீரத்தாய் குயிலி ஆகியோரது திருவுருச்சிலைகள் மற்றும் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடு பதி எத்தலப்பர் நாயக்கரின் உருவச்சிலை மற்றும் அரங்கம் பற்றிய விவரங்கள் வருமாறு:“தானம் என்றால் கேள் தருகிறேன்.வரி ª யன்றால் ஒரு நெல் மணி கூட கட்டமாட்டேன் ” என்று முழங்கி நெல் கட்டான் செவல் எனப்பேர் படைத்த பூலித் தேவனின் முக்கிய தளபதியாகத் திகழ்ந்து வெள்ளயரை வென்றழித்து பூலித்தேவன் மடியில் உயிர் நீத்தமாவீரன் வெண்ணி காலாடியின் தியாக வீரத்தைப் போற்றிடும் வகையில், 2023- 24 ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், அவருக்கு தென்காசி மாவட்டத்தில் திருவுருவச்சிலை அமைக் கப்படும் என் றஅறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பிற்கிணங்க, தென்காசிமாவட்டம், நெல்கட்டும் செவல்கிராமம், பச்சேரியில் வெண்ணிகாலாடிக்கு  50 லட்சம் ரூபாய்செலவில் நிறுவப்பட்டுள்ள உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். குயிலியின் உருவச் சிலை சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரைக் கொன்று வஞ்சகத்தால் சிவகங்கையை கைப்பற்றிய,  வெள்ளையரை வென்று சிவகங்கையை மீட்டிடச் குளுரைத்துத்திண்டுக்கல் விருப்பாட்சி கோபால் நாயக்கரிடம் உதவி கேட்டுத்தஞ்சமடைந்தார் அவருடைய மனைவி வேலுநாச்சியார். அவர் தம்முடைய படைத் தளபதியாக விளங்கிய வீரத்தாய் குயிலி,மருது பாண்டியர்களுடன், திப்பு சுல்தான் உதவி யோடு சிவகங்கையை மீட்டிடப்படை திரட்டி, வழியில் எதிர்ப்பட்டபகைவர் களை எல்லாம் வென்றழித்து சிவகங்கையில் முகாமிட்டிருந்த வெள்ளையரைத்தாக்கினார். அந்தப்போர் முனையில் ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதங்களால் தோல்வி காணநேரும் சூழ் நிலை உருவான போது வீராங்கனை வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி  மெய் முழுதும் எரி யெண்ணெயைத்தடவிக்கொண்டு வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்து அழித்துத் தியாகச்சுடராகி சிவகங்கை வெற்றிக்கு வழிவகுத்தார்.2 0 2 3 – 2 4 ம் ஆண்டிற்கான
செய்தி மக்கள் தொடர்புத் துறைமானியக் கோரிக்கையில், சுதந்திரப்போராட்ட வீராங்கனை குயிலிக்கு சிவகங்கையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை வட்டம்,ராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்ட பவளாகத்தில் குயிலித்தாய்க்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.எத்தலப்பர் நாயக்கர் உருவச் சிலை அருமை நண்பர் வீரபாண்டியக் கட்ட பொம்மனை நயவஞ்சகத்தால் கைது செய்து தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்குத்தக்கபாடம்புகட்டு  வேன் எனச் சூளுரைத்து அதற்குரிய தருணத்தை நோக்கியிருந்தார் தளிபாளையக்காரர்  மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர்.அவரிடம் வரி கேட்டு வந்த அந்திரை கேதிஷ் என்ற ஆங்கிலேயத்தளபதியைப் பிடித்துத் தூக்கிலிட்டுப்பழிக்குப் பழிவாங்கினார் சுதந்திரப் போராட்ட வீரர் தளிபாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர்.அவரது வீரத்தை போற்றி 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர்மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கரின் உருவச்சிலையையும், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், செய்தித் துறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன்,தலைமைச் செயலாளர் நா.முருகானந்தனம்,செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் ,செய்தி மக்கள் தொடர்புத்துறைஇயக்குநர் இரா.வைத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்