ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி; எப்படி இருந்த அதிமுக!

இப்படி ஆயிடுச்சே…!

திருமாவளவன் கிண்டல்!!

சென்னை ஜூலை.17 –                           “திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் பாஜகவை எதிர்ப்பேன்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித் தார். இது குறித்து  சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது -“ தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் என்னை சந்திக்க விரும்பினால் சந்திப்பதில் தயக்கமில்லை. பாஜக வில் ஏராளமானவர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். நட்பு வேறு, கொள்கை வேறு.அவர்களுக்கு அவர்களது கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ, அது போல விசிகவின் கோட்பாடுகள் எனக்கு முக்கியம். இதைத்தாண்டி நட்பு இருப்பதில் தவறில்லை. அதனடிப் படையில் கே.பி.ராமலிங்கம் நன்கு அறிமுகமா னவர். அவர் திமுக எம்.பி.யாக இருந்த காலத்தில் நாடாளு மன்ற மைய மண்டபத்தில் சந்தித்திருக்கி றோம். அந்த நட்பின் அடிப்படையில் சந்திப்பதாக இருந்தால் நிச்சயமாக வரவேற் போம்.ஆனால், பாஜக கொள்கை என்பது அம்பேத்கரின் கொள் கைக்கு நேர் முரணானது என்பதை நாங்கள் புரிந்திருக்கி றோம். அதில் உறுதியாக இருக்கி றோம்.திமுக வுடன் இருப்பதால் பாஜகவை எதிர்ப்பதாக கருதுகின்றனர். அப்படியல்ல. திமுகவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களால் பாஜக கொள்கை களை ஏற்றுக்கொள்ள முடியாது. தனியாக இருந்தாலும் பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்போம். அதற்கு பாஜக மீது தனிப்பட்ட தேர்தல் அரசியல் காரணமல்ல. அம்பேத்கரின் உயிர் மூச்சு கோட் பாடாக இருக்கும் மதச்சார்பின் மைக்கு நேர் எதிராக இருப்பதால் பாஜகவை எதிர்க்கி றோம். அவர்கள் கூட்டணிக்கு அழைத்ததும் சென்றிருந்தால் என்னை புகழ்ந்தி ருப்பார்கள்.  அவ்வாறு செய்ய வில்லை. இதனால் என்னை கொச்சைப் படுத்தும் நோக்கில் பேசிகின்றனர். இது அவர் களின் மன சாட்சிக்கு தெரியும். அதிமுகவை நான் விமர்சிக்கவில்லை. அவர்கள் மீது எந்த காழ்ப்பும் இல்லை.தன்னை பல வீனமாக கருது பவர்களை பாதுகாத்து,பலவீனமாகிவிடக் கூடாது என கவலையடையும் என்னை விமர்சிப்பதும் அதிமுக வின் அணுகு முறையாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை பாஜக துச்சமாக மதிக்கிறது. பாஜகவுக்கு எதிராக அல்லவா கோபம் வரவேண்டும் . அதை சுட்டிக் காட்டும் என்னை விமர்சிக்கும் அதிமுக தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்வ தாகவே பார்க்க வேண்டியிருக் கிறது.

விசிக மீது சந்தேகத்தை உருவாக்கி னால் திமுக கூட்டணியில் குழப்பம் உருவாகி, விரிசல் ஏற்படும் என்பதை பாஜகவின் எதிர் பார்ப் பாக இருக்கி றது. இந்த கட்சி வளரவே கூடாது என நினைப் பவர்கள் கூட ஏன் 6 சீட் வாங்கு கிறீர்கள் என திடீர் கரிசனத் தில் கேட்பதற்கு,எங்கள் நலன் மீதான அக்கறை காரணமல்ல. எங்கள் உணர்ச்சியை தூண்டி திமுக மீது வெறுப்பு வர வைக்க முயற்சிக் கின்றனர். பாஜக என்னும் மதவாத சக்தியை எதிர் கொள்ள திமுக மட்டுமே பாதுகாப்பு அரண் என நான் சொல்வில்லை .விசிகவும் சேர்ந்து உருவாக்கிய திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி தான் பாது காப்பு அரண் என சொல்கி றேன்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.