திருச்சி மாவட்டம் கூட்டுறவுத் துறையில் முறைகேடு! பெண் ஒருவருக்கு  பாலியல் சீண்டல்!!

திருச்சி மாவட்டம் கூட்டுறவுத் துறையில் முறைகேடு

அமராவதி நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத நபர் வலம் வருகிறார் அலி சேர் என்ற நபர் விற்பனையாராக பணிபுரிந்த பெண் ஒருவருக்கு  பாலியல் சீண்டல் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.

திருச்சி மாவட்டம்கூட்டுறவுத் துறையை சார்ந்த அமராவதியில் 13 வருடங்களாக விற்பனையாளராக வேலை பார்த்த பெண் பாத்திமா காலில் காயம் ஏற்பட்டதால் 14 நாட்கள் மெடிக்கல் விடுப்பு எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது மீண்டும் பணியில் ஈடுபடுவதற்காக மெடிக்கல் சீட் மற்றும் அனுமதி கடிதம் கொடுத்த போது வேண்டு மென்றே நிர்வாகத்தின் தரப்பில் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது இதனால் பாதிக்கப்பட்ட பெண் அன்றைய நாளில் நான் அலுவலகத்தில் மீண்டும் பணியில் சேர்வதற்காக வந்து விட்டேன் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ளதன்னையே செல்ஃபி கேமரா மூலம் வீடியோ எடுத்து அலுவலகத்தில் உள்ளேன் நுழைந்தார் அப்போது, திடீரென குறுக்கே வந்த அடையாளம் தெரியாத புரோக்கர் அலிசேர் என்ற நபர் வெளியே போ என்று அந்தப் பெண்ணை அகற்றியபடி தோளில் கையை போட்டுபாலியல் சீண்டலில் ஈடுபட்டார் இதனால் மனமுடைந்த பெண்மணி என்னை வெளியே போ என்று சொல்வதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது நீ யாரென்று கேள்வி எழுப்பிய படியே அங்கு கத்தி கூச்சலிட்டார் இந்த நிகழ்வு எதுவுமே நடக்காது போல் எம்பி திருப்பதி ஜி எம் அறிவழகன்ஆகியோர் கண்டு கொள்ளாதது போல்இருந்து வந்தனர் தொடர்ச்சியாக பல முறைகேடுகளில் இவர்கள் கூட்டாக ஈடுபடுகின்றனர் என்று பாதிக்கப் பட்ட பாத்திமா என்ற பெண் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்பாத்திமா
மேலும் இது தொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

தமிழகத்தில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள்
அரங்கேறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்