அம்பாசமுத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிக வார சந்தை : மாவட்ட ஆட்சியர் மரு.கா.ப.கார்த்திகேயன் திறந்து வைத்தார்

நெல்லை, செப்.29 திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் நகராட்சி கலை மற்றும் அறிவியல்கல்லூரி எதிரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடவளாகத்தில் தற்காலிக வார சந்தையினை மாவட்ட ஆட்சியர் மரு.கா.ப.கார்த்திகேயன்,அம்பாசமுத்திரம் நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகரபாண்டியன் முன்னிலையில் நேற்று (28.09.2024) திறந்து வைத்தார்.இந்த சந்தையில் 30 கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு நடவடி க்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. மாதம் ரூ.711 மற்றும் சதுர அடிக்கு ரூ.3 என்ற விகிதத்தில் குறைந்த வடையில் இதற்கு முன்னர் பழைய வார சந்தையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்றுமுதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது . பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் இந்த தற்காலிக சந்தை சிறப்பாக இயங்குவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.இந்நிழ்வில், வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்)பூவணன், நகராட்சி ஆணையாளர்  செல்வராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் சிவ சுப்பிரமணியன், வியாபாரிகள் சங்கத் தலைவர் மாரியப்பன் ,விற்பனைக்குழு செயலாளர் எழில் உட்பட அலுவலர்கள், வியாபாரிகள்,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்.