இராணிப்பேட்டை,செப்,28 பாணப்பாக்கம் சிப்காட்டில் டாடா மோட்டார்ஸின் கார் உற்பத்தி தொழிற்சாலை கட்டுமானம் துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இன்றுஅடிக்கல் நாட்டுகிறார். இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலிஅடுத்த பணப்பாக்கத்தில் புதியதாக சிப்காட்(தொழிற் பூங்கா ) உருவாக்கப் பட்டுள்ளது.அதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் ரூ 9000கோடியில் புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளது.அதற்கான கட்டுமானப் பணிதுவக்க விழா இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி தொழிற்சாலை கட்டுமான பணியை துவக்கிவைக்கிறார்.இவ்விழாவில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்,மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்கள்மற்றும்பொதுமக்கள்கலந்து கொள்கின்றனர்.
பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9000 கோடியில் டாடாதொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார






