கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணா திமுக கட்சியின் சார்பில் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்C.V.. சண்முகம் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
சிதம்பரத்தில் தனியார் ஓட்டலில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கே. ஏ. பாண்டியன் தலைமையில் அண்ணா திமுக கட்சியின் சார்பில் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சி.வி சண்முகம். ராயபுரம் மனோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் வருகின்ற 2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் எப்படி சட்டமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது இதில் அண்ணா திமுகவின் சார்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை கூறினர் இவர்கள் கூறுகையில் 2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை பற்றி நமது கட்சியின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்கள் முடிவை எடுப்பார் என்றும் இந்த முடிவு ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்றும் அதை பற்றி நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் கட்சியில் பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது திமுக கூட்டணியில் பல கட்சிகள் தானாக விலகி அண்ணா திமுக கூட்டணிக்கு வரும் என்றும் கூறப்பட்டது இக்கோட்டத்தில் காட்டுமன்னார்கோயில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகமாறன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
இந்த கூட்டத்தில் மிகக் குறைந்த அளவு நிர்வாகிகளுக்கு மட்டும் தான் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பாக சிதம்பர சட்டமன்ற உறுப்பினர்k.a. பாண்டியனை எதிர்த்து கேள்வி கேட்காத அண்ணா திமுக கட்சி நிர்வாகிகள் மட்டும் தான் இதில் கலந்து கொண்டார்கள் பல அண்ணா திமுக நிர்வாகிகள் அவர்களுக்கு அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது






