ராமநாதபுரம் : திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவிகளுக்கு பழமையான காசுகள் பானை ஓடுகளை அடையாளம் காணவும் கல்வெட்டுகளை படிக்கவும் படையெடுக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது
இந்நிலை திருப்புல்லாணியை சேர்ந்த கமலி மேகலை சோ. திவ்யத்தர்ஷினி, சே.கனிஷ்கா ஸ்ரீ ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள் விடுமுறையின் வீட்டின் முன் மண்ணில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது பழமையான காசு கிடைத்ததாக மன்ற செயலாளர் வே.ராஜ குருவி இடம் கொடுத்தனர் அந்த காசியம் அது கிடைத்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்த பின் தொன்மை பாதுகாப்பு மன்ற செயலரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான வே. ராஜகுரு கூறியதாவது மாணவர்கள் கொடுத்தது முதலாம் ராஜராஜ சோழன் பெயர் குறித்த கீழக்காசு ஆகும் இவ்விடத்தில் கள ஆய்வு செய்தபோது சீன நாட்டு கோச்சலில் ஓடு இரும்பு தாதுக்கள் இரும்பு தகடுகள் சிவப்பு நிற பானை ஓடுகள் கிடைத்தன காசியின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க அவரது இடப்பக்க நான்கு வட்டங்கள் உள்ளன அவற்றின் மேலே பிறை உள்ளது வலது பக்கம் திரிசூலம் விளக்கு உள்ளது மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்க அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்துக்களில் ராஜராஜ என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது காசின் ஓரங்கள் தேய்ந்துள்ளன. முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக் காசுகள் பொன் வெள்ளி செம்புகளில் வெளியிடப்பட்டன. இது செம்பால் ஆன காசு கீழ காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய பட்டணம், தொண்டி களிமண் குண்டு அழகாய்வுகளிலும் கடற்கரைப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன இப்பள்ளி மாணவர்கள் ஏற்கனவே திருப்புல்லாணியைச் பஞ்சந்தாங்கி, தாதனேந்தல், கோரைக்குட்டம் ஆகிய ஊர்களில் இக்காசுகளை கண்டெடுத்துள்ளனர். இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர் ஆளுகையில் கீழே இருந்தால் நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்
மணலில் விளையாடிய போது பள்ளி மாணவிகளுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்






