அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

சேரன்மாதேவி

வீரவநல்லூரில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்நெல்லை புறநகர் மாவட்டம் வீரவநல்லூரில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ வீரவநல்லூர் பகுதிகளில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து கடையம்மன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் வைத்து அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், வீரவநல்லூர் நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில ஜெ.பேரவை துணைச் செயலாளர் சிவன் பாபு, மாவட்ட அவைத் தலைவர் கூனியூர் மாடசாமி,மாவட்டத் துணைச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிறாஸ் இமாக்குலேட்,நகர செயலாளர்கள் சேரன்மாதேவி பழனிகுமார், வி.கே.புரம் கண்ணன், ரவிச்சந்திரன், வக்கீல்கள் சிவசுப்பிரமணியன், ராமையா மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.