ரேஷன் அரிசி கடத்­திய வாலிபர் மீது கள்­ளச்­சந்­தைக்­கா­ரர் தடுப்பு காவல் சட்­டம் பாய்ந்­தது!

தூத்­துக்­குடி கலெக்­டர் நட­வ­டிக்கை!

தூத்­துக்­குடி, ஆக.5தூத்துக்­குடி மாவட்­டம்கோவில்­பட்டி மாதன் கோவில் ரோடு, கிருஷ்ணன் கோவில் ஜங்­ஷனில் கடந்த ஜூலை 13ம்தேதி லோடு ஆட்டோ ஒன்­றில் 40 மூடை­க­ளில் சுமார் 2000 கிலோ ரேசன் அரிசியை கடத்திய எதிரி கோவில்­பட்டி, ஊரணி1வது தெரு­வைச் சேர்ந்தலுக்கா அசாரியாமகன் முத்து மாரியப்­பன் @ சின்ன­மாரி, (33) என்­பவர் 16ம் தேதி கைதுசெய்­யப் ­பட்­டார். எதிரியை கள்­ளச்­சந்­தை காரர் தடுப்புக் காவலில் சிறை யில் அடைக்க மதுரை,தென்மண்­டல கு.பொ.வ.கு.பு.துறைகாவல்கண் ­காணிப்­பாளர் சீனிவாச பெருமாள் அறிவு­ரை­யின் பேரில் தூத்துக்­குடி மாவட்ட ஆட்சியர் 31ம் தேதி முத்து மாரியப்­பனை கள்­ளச்சந்­தை­காரர் தடுப்புக் காவலில் சிறை அடைக்க உத்­த­ரவுப்பி­றப்பித்­தன் பேரில், நேற்று 1ம் தேதி பாளையங்­கோட் டை மத்திய சிறையில் அடைக்­கப் பட்­டார்.தொடர்ந்து பொது விநியோ­கத்திட்ட அரிசியை கள்­ளச்­சந்­தை யில் பதுக்கும் கடத்­த­லில் ஈடுபடும் எதிரி­களை கள்­ளச்­சந்­தைகாரர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்­கப்­படுவார்­கள் என தூத்துக்­குடி மாவட்ட ஆட்சித்­த­லை­வர் தெரிவித்துள்­ளார்.