பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் : ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!

சென்னை, செப்.26 பாராலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலபதக்கம் வென்ற தமிழகவீரர்களுக்கு ரூ.5 கோடி
ஊக்கத்தொகையை தமிழகஅரசு வழங்கி இருக்கிறது.இந்தஆண்டில் நடை பெற்றமாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கி றார்.பாராலிம்பிக்கில் தொடரில் கலந்து கொண்டு வெள்ளி மட்டும் வெண்கலபதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி,மணிஷா, நித்யஸ்ரீ உள்ளிட்டோருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.இதுவரை இல்லாத அளவிற்கு பாராலிம்பிக்தொடரில் இந்த ஆண்டு இந்திய அணி 29 பதக்கங்களைக்கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தது. அதில் , 7 தங்கப்பதக்கமும், 9 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 13 வெண்கலப் பதக்கமும் அடங்கும். அதிலும், தமிழகவீரர்கள் 2 வெள்ளி, 2வெண்கலம் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்கள்.தற்போது, 4 பதக்கங்
களை வென்ற நம் தமிழக வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை வழங்கி இருக்கிறார் .மேலும், நேற்றும் இதேபோல செஸ் ஒலிம்பியாட்தொடரில் தங்கம் வென்றதமிழக வீரர்களுக்கு ரூ.90லட்சம் ஊக்கத்தொகை
வழங்கி பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.