கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை பகுதிகளில் க் காட்டு யானைளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலை யில் கடந்த வாரம் பன்னார் கர்ட்டா வனபகுதியில் இருந்து சுமார் 50 யானைகள் தளி வனபகுதி வழியாக ஜவ்ளகிரி வன சரகத்திற்கு வந்த நிலையில் அதில் 60க்கும் மேற் பட்ட யானைக் கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளுக்குள் சென்ற நிலையில் இருபது யானைகள் நொகனூர் வனப்பகுதி களில் குட்டிகளுடன் முகாமிட்டது. அதனை தொடந்து பூதுக்கோட்டை, சந்தனம் பள்ளி, கல்ச்சூர், குரும்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்தும் விவசாய நிலங்களுக்குள் அட்டகாசம் செய்து வந்தது குறிப்பாக நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகி, நெல், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதியில் முகமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண் காணித்து வருகின்றனர். மேலும் யானைக் கூட்டத்தை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிகாலை ஊடே துர்க்கம் மனப் பகுதியில் இருந்து வெளியேறிய பத்துக்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் ஓசூர் வனப்பகுதியான சாணமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதன் காரணமாக சினிகிரிப் பள்ளி, கொம்பே பள்ளி பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டத்திற்கு செல்லும் போது பாதுகாப்பாவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.
ஓசூர் அருகே இரவோடு இரவாக இடம் பெயர்ந்த யானை கூட்டம்!






