மாலை முரசு அதிபர், நம் மண்ணின் மைந்தர் உயர்திரு இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு காயாமொழியில் நிறுவப்பட்டுள்ள அவரது திருஉருவச் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
நிகழ்வில் முன்னாள் மண்டல செயலாளர் தமிழினியன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், செய்தி தொடர்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் சர்மிளா, தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் லாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களும் இன்று காலை சென்னையில் ராமச்சந்திர ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






