உளுந்தூர்பேட்டை,செப்.25
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர
மரத்தில் மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த 14 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருச்செந்தூர் கோவி
லில் சாமிகும்பிட்டுவிட்டுதிரும்பிய போது இந்த சோக சம்பவம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள மாம்பாக்கம்
வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 20 பேர் தூத்துக்குடி மாவட்டம், திருச்
செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி
தரிசனம் செய்ய நேற்று வேனில் சென்றுள்ளனர்.தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த பின்னர் வேனில் நேற்று இரவு புறப்பட்டு, சொந்த ஊர்
திரும்பிக் கொண்டிருந்தனர்.இவர்கள் வந்த வேன் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்
குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மேட்டத்தூர் பகுதியில் புதன்கிழமை அதிகாலை
வந்த போது,திடீரெனஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்தது. இதில் சாலையின் இடதுபுறத்திலிருந்த மரத்தின் மீது வேன் மோதியது.
இதில் வேன் அப்பளம் போல நொறுங்கி விட்டது. அதிகாலை வேளை என்பதால் வேனில் இருந்
தவர்கள் நன்கு அயர்ந்து தூங்கிவிட்டனர். இந்த விபத்தில் 2 பெண்
கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர்
பலத்த காயமடைந்தனர்.விபத்து
குறித்து தகவலறிந்த திருநாவலூர்
காவல்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை ரோந்துமீட்புப் படையினர், உளுந்தூர் பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினர் நிகழ்விடம் விரைந்து வந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் சட
லங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு,மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஓட்டுநரும் கண் அயர்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.இந்த விபத்தின் காரணமாக திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப்பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து திருநாவலூர் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் வேன் மோ தி 6 பேர் நசுங்கி சாவு மேலும் 14 பேர் காயம் அடைந்தனர் திருச்செந்தூருக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்!






