புதிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, பிரேக் பிடிக்காமல் விபத்து,ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் ஒருவர் பலி!

காட்டுமன்னார்கோவில் அருகே புதிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, பிரேக் பிடிக்காமல் விபத்து,

ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் ஒருவர் பலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாமங்கலம் கிராமத்தில் சென்னை- கும்பகோணம் நான்கு வழி சாலையில் பேருந்து நிறுத்த பகுதி இருந்து வருகிறது.இந்நிலையில்
கும்பகோணம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு புதிய விரைவு பேருந்து மாமங்கலம் பேருந்து நிறுத்த பகுதியில் வந்தபோது திடீரென பேருந்துக்கு முன்னால் சாலையைக் கடக்க வந்த ஒருவர் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல்சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புக்கட்டையில் மோதி முன் சக்கரம் வெடித்து பஞ்சரானது. இதனால் மேலும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, இழுத்துச் சென்று தடுப்பு பட்டையின் மோதி நின்றது. இதில் பேருந்தில் முன்பக்கம் சேதம் அடைந்தது.
அப்போது பேருந்தில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்பட்டோர்
படுகாயத்துடன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பர அரசு மருத்துவமனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து சோழத்தரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.