திமுக அரசை கண்­டித்து 24-ம் தேதி அதி­முக ஆர்ப்­பாட்­டம்!

சென்னை,செப்.14- அதிமுக பொதுச்­செ­யலா­ளர் எடப்­பாடி பழனிசாமி வெளியிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறியிருப்­ப­தா­வது:- முதல்-அமைச்­சர் மு.க.ஸ்டாலின் தலை­மையிலான திமுகஅரசு பொறுப்­பேற்­ற­தில் இருந்து, தமிழகத்தில் பெண்­கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்­கொ­டுமை அதிகரித்து வருவதை அனை­வரும் அறி­வோம். சமீப காலங்­களில் ஊட­கம் மற்றும் நாளிதழ்­க­ளில் பெண்­க­ளுக்கு எதிரான குற்­றங்­கள் தினசரி செய்திகளாக வெளிவருவ­தைப் பார்த்து தமிழகமக்­க­ளு­டன் நானும் மிகுந்த வருத்­த­மும், மனவேத­னை­யும் அடைந்துள்­ளேன் சமூக விரோத சக்திகளைக் கட்­டுப்­ப­டுத்த தவறிய இந்த திமுக ஆட்­சியில், தமிழக மக்­க­ளுக்கு பாதுகாப்­பற்ற சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. திமுக ஆட்­சியில் கொலை­கா­ரர்­களும், கொள்­ளைக்­கா­ரர்­களும், பாலியல் வன்­கொ­டுமையா­ளர்­க­ளும் சுதந்­திர­மாக, சர்வ சாதா­ரண­மாக குற்­றம் புரிவது வாடிக்­கை­யாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வய­தைக்கடந்த பெண்கள் வரை,யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்­நிலை ஏற்­பட்டுள்­ளது. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலியல் குற்­றங்­க­ளைத் தடுக்­கவும், சட்­டப்­படி உறுதியான நட­வடிக்­கைகள் மேற்­கொள்­ள­வும் தமிழக காவல் துறைக்கு முழு சுதந்­திரத்தை இன்று வரை வழங்­க ­வில்லை. மேலும், திமுக அரசின் முதல்-அமைச்­ச­ரு­டைய செயலற்­றத் தன்­மை­யால் ஒரு சில காவல் துறை­யினர் மக்­களை பாதுகாப்­பதற்கு பதிலாக, சமூக விரோ­திகளுக்கு உடந்­தை­யா­க இருப்­ப­தாக வரும் செய்திகள் வெட்­கக் கேடா­னதா­கும்.கடந்த 40 மாத கால திரா­விடமாடல் ஆட்சியில் அதிகரித்து வரும்,பெண்­க­ளுக்கு எதிரான குற்­றங்­கள் மற்றும் பாலியல் வன்­கொ­டு மைகளை தடுக்­கத் தவறிய சமூக விரோ­தச் செயல்­களை கட்டுப்­ப­டுத்த தவறிய திமுக அர­சைக் கண்­டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்­கள் பாசறை சார்பில், 24.9.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில், சென்னை மாந­கரில் மாபெரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம், கழக மகளிர் அணிச்செயலா­ளரும், கழக செய்தித் தொடர்­பா­ளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பா.வளர்­மதி அவர்­கள் தலை­மையிலும் ,கழக அமைப்புச்செயலா­ளரும், கழக செய்தித் தொடர்­பா­ளரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான எஸ்.கோகுல இந்திரா முன்னி­லை­யிலும் நடைபெறும்.திமுக அர­சைக் கண்டித்து நடைபெற உள்ள  இந்­தக் கண்டன ஆர்ப்­பாட்­டத்தில்,கழக மகளிர் அணியில் பல்வேறு நிலை­களில் பணியாற்றிவரும் நிர்­வா­கிகளும்,இளம்­பெண்­கள் பாச­றை­யைச் சேர்ந்த நிர்­வா­கிகளும், மகளிரும் பெருந்­திரளா­கக் கலந்­து கொள்ளு­மாறு கேட்­டுக்கொள்கி­றேன். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.