63 நாயன்மாரில் ஒருவரான நந்தனார் பிறந்த ஊர் என்று கூறப்படுகிறது என்று அவருக்கு குரு பூஜை

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள மே. ஆதனூர் கிராமத்தில் 63 நாயன்மாரில் ஒருவரான நந்தனார் பிறந்த ஊர் என்று கூறப்படுகிறது என்று அவருக்கு குரு பூஜை நடைபெற்றது.

சிதம்பரம் அருகில் உள்ள மே .ஆதனூர் கிராமத்தில் திருநாளை போவார் நந்தனார் குருபூஜை விழா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு அவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் முன்னிலை அன்புச்செல்வன் மற்றும் பரமகுரு தங்கராஜ் முன்னிலை வைக்க கிராமத்தில் மேல தாளங்களுடன்500க்கும் மேற்பட்ட பெண்கள் நந்தனார் சிலைக்கு ஊர்வலமாக முலைப்பால் எடுத்து வந்து நந்தனாருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது மற்றும் ஓதுவார்கள் மந்திரங்கள் ஓத யாக குண்டலத்தில் யாகங்கள் வளர்த்து நந்தனார் சிலைக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன பால் அபிஷேகம் சந்தன அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் மற்றும் தயிர் அபிஷேகம் பல வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன முடிவில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நந்தனாரின் குருபூஜை முன்னிட்டு அன்னதானங்கள் வழங்கப்பட்டன குறிப்பு இந்த ஊரில் நந்தனார் பிறந்ததாக ஐதீகங்கள் கூறுகின்றன அதன் எதிரொலியாக அவருக்கு கோவில்கள் கட்டப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.