சென்னை : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அழகான மாளிகையை சிதைத்து விட்டு குட்டிச்சுவரைக் கட்டிப் பார்க்கும் முட்டாள் தனமான முடிவு .மத்திய அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பது உட்பட16 தீர்மானங்கள் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள்நீதி மய்யம் கட்சியின் 2-வதுபொதுக்குழு கூட்டம் நெற்றுநடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். கட்சி நிர்வாகிகள்,1414 பொதுக்குழு உறுப்பினர்கள்,
சிறப்பு அழைப்பாளர்கள் என2570 பேர் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் முதல்‘‘ஒரு தமிழன் பிரதமர் ஆக நாட்டை தயார்படுத்த வேண்டும்” -மநீம பொதுக்குழுவில் கமல்ஹாசன் பேச்சு
பொதுக் குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் ஹாசன் ஒரு மனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள்நீதி மய்யம் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட 1 6தீர்மானங்கள் வருமாறு:
1 . பொதுக்குழுவில் மீண்டும் நிரந்தர தலைவராக கமலஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2. தேசிய வளர்ச்சிக்காக வரி செலுத்துவதில் மாநிலங்களுக்கு பங்கு முக்கியம்“ எனக்கு சீட்கொடுத்திருவாங்களோ என பயந்தவர்களுக்காக பிரச்சாரம் செய்யப்போறேன்’’மேடையிலேயே சொன்ன கமல்! “எனக்கு சீட்கொடுத்திருவாங்களோ என பயந்தவர்களுக்காக பிரச்சாரம் செய்யப்போறேன்’’மேடையிலேயே சொன்ன கமல்!” 3.தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வை ஒன்றிய அரசு பகிர்ந்துஅளிக்க வேண்டும். 4. வேளாண் விஞ்ஞானி சுவாமி நாதன் குழுபரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு 50சதவீதலாபத்தை கொடுக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு நடைமுறைப் படுத்தவேண்டும். 5.எம்.எஸ். சுவாமிநாதன் கூறிய தன் அடிப்படையில் வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப் பூர்வமாக நிர்ணயிக்கவேண்டும். 6. ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் முயற்சி கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒரேநாடு ஒரே தேர்தலை மக்கள் நீதிமய்யம் வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 7.குறைந்த பட்சம் ஒ ரு பூத்திற்கு ஐந்து பேரை நியமிக்கவேண்டும். 8.மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடைபடையினர் கைது செய்வது, அவரது படகுகளை பறிமுதல் செய்வது , நெடு நாட்கள் சிறையில் சித்திரவதை செய்வது,மோட்டை அடிப்பது , அவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைப்பது போன்ற அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல் களையும் அத்து மீறல்களையும் மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கி றோம் . இனியும் அனுமதிக்க முடியாது. உடனடியாக அதைத் தடுக்க இரு நாடுகளுக்கு இடையே உடன் படிக்கை ஏற்படுத்த வேண்டும். 9.கிராம சபை என்பது உள்ளூர் அரசாங்கம் போன்றது.கிராமசபை யை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.10.நாடாளு மன்ற தொகுதிகளை மக்கள் தொகைஅடிப்படையில் மறு சீரமைப்புசெய்வது, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ் நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
11. அழகான மாளிகையை இடித்துவிட்டு குட்டிச் சுவர் எழுப்புவது தான் இந்த ஒரேநாடு ஒரே தேர்தல். மாநிலக் கட்சிகளின் தேவையை இல்லாமல் ஆக்கிவிடும் அபாயம் உள்ளது.இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
12. இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆககுறைக்க மத்திய அரசு உரியசட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
1 3.வேலையின்மை ,பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் நிலையில் அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை வழங்க வேண்டும் . அதன் மூலம் தேவைப்படு வோருக்கு உதவிகளைச் செய்யவேண்டும்.14. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதற்காக தமிழக அரசையும், தமிழக மக்களையும் பாராட்டுகிறோம்.மக்கள் நிதி மய்யம், மோகன் பவுண்டேஷன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர், விரைவில் அந்த எண்ணிக்கை 10 ,000 ஆக உயர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.15. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் 5 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிநடைபெற உள்ளது.16. மநீம கட்சியின் புதியபொதுக்குழு , செயற்குழு மற்றும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வானவர்கள்,அர்ப்பணிப்புடன் உழைத்துமக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களது பணி சிறக்க இந்த பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது .ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.






