ஆட்டோ மீது அரசு பஸ் மோதி கற்பிணி பலி
நெல்லை, மார்ச் 19:
நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியில் அரசு பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் கற்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்தமடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஷேக் மைதீன் மகன் கச்சி சுல்தான் (33) மற்றும் அவரது மனைவி சையது அலி பாத்திமா (26) கற்பிணியாக இருந்தார். இந்நிலையில், இருவரும் நேற்று பத்தமடையிலிருந்து மேலப்பாளையத்திற்கு ஆட்டோவில் சென்றனர். அந்த ஆட்டோவை நாகூர் முகைதீன் ஓட்டி வந்தார்.
பின்னர் மாலை நேரத்தில், அதே ஆட்டோவில் தம்பதியினர் பத்தமடைக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தருவை அருகே வந்தபோது, பாபநாசத்திலிருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் எதிரே வந்து ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் கச்சி சுல்தான், அவரது மனைவி சையது அலி பாத்திமா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நாகூர் முகைதீன் ஆகியோர் கடுமையாக காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சையது அலி பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து முன்னீர் பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்கு பதிவு செய்து, அரசு பஸ் ஓட்டுநர் ஜெகனை விசாரணைக்கு உட்படுத்தி வருகிறார்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ மீது அரசு பஸ் மோதி கற்பிணி பலி






