எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவனின் 63 வது பிறந்தநாள் விழா, கேக் வெட்டி கொண்டாட்டம் !
பத்தமடை மாநகரில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 63 வது பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து 200 பேருக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி பார்சல்கள் வழங்கப்பட்டது.
இதில் பத்தமடை நகர செயலாளர் நடராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்,சேரை ஒன்றிய செயலாளர் வே. மாதவன் அவர்கள் முன்னிலை வகித்தார், பத்தமடை நகர துணைச் செயலாளர் S.P.N கான்சா மைதீன் வரவேற்பு உரை ஆற்றினார், பத்தமடை நகர பொருளாளர் ரா.முருகன், சேரை செயற்குழு உறுப்பினர் சுந்தர், மகளிர் விடுதலை இயக்கம் வி. தாட்சாயினி வில்சன், வே. சரவணன், ஆனந்த் தங்கராஜன், சேரை நகர துணைச் செயலாளர் பக்கீர் மைதீன், வாசுகி நடராஜன்,முத்து ரம்யா, தானியஸ்ரீ, பகவதி, ஷாலினி, சினேகா சாமுவேல், கதிர்வேலன், ஒர்க் ஷாப் ஆறுமுகம், தயாநிதி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தந்தனர். பத்தமடை நகர துணைச் செயலாளர் வி.சாமுவேல் நன்றி உரையாற்றினார்






