நிபா வைரஸ் உயிரிழப்பு ; குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை சுகாதார துறை அதிரடி!

நாகர் கோவில் செப்- 19,கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் உயிரிழப்பு. கன்­னி­யாகுமரி மாவட்ட எல்­லை­யில் களி­யக்­காவிளை ,கொல்­லங்­கோடு ஆகிய சோதனை சாவ­டி­ய­க­ளில் நேற்று முதல் தமிழக சுகா­தார துறை காய்ச்­சல் பரி­சோ­தனை மற்­றும் கண்­காணிப்பு தீவிரம் கேரளாவில் மீண்டும் நிஃபா காய்ச்­சல் பரவி வரும் நிலையில்மலப்­பு­றம் மாவட்­டத்தில் பலி­யான 24 வயது இளைஞரின் 175 தொடர்­பு­கள் கண்­கா­ணிப்­பில் வைத்து தடுப்பு நட­வ­டிக்கை தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது.இந்நி­லையில் கன்­னி­யா­குமரி மாவட்ட எல்­லையில் நேற்று முதல் களி­யக்காவிளை,கொல்­லங்­கோடு ஆகிய சோதனை சாவ­டி­க­ளில் தமிழக சுகாதார துறை அதி­காரி­கள்கண்­கா­ணிப்பு தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது.கேரளாவில் இருந்து வரும் வாக­னங்­களை தடுத்து நிறுத்தி பய­ணி­க­ளுக்கு காய்ச்­சல் பரி­சோ­தனை மற்­றும் தொடர்பு எண்­கள்,முக­வரி பதிவு செய்த பின் தமிழ­கத்திற்­குள் செல்ல அனுமதிக்­கப்­ப­டுகின்­றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறை­யில் இந்தசோதனை நடை­பெற உள்ளதாக சுகாதார துறை அதி­காரி­கள் தெரிவித்­த­னர்.