என் பெயர் மேனன் இல்லைங்க மெனன்! நித்யா விளக்கம்!!

தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மெனன் என்பது தனது சாதியோ, பெயரோ கிடையாது என மறுத்துள்ளார். நித்தியா மெனன் இது குறித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பேசி இருப்பதாவது இதுவரை யாருமே என் பெயரை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு உங்களுக்கு கொச்சிக்கு தானே டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று கேட்கின்றனர். ஆனால் நான் கன்னடத்தை சேர்ந்தவள். எனது பெயரில் இருக்கும் மெனன் என்பது நானாக வைத்துக் கொண்டது. அதை நிறைய பேர் மேனன் என்று நினைக்கின்றனர். அது அப்படி இல்லை ஜாதி பெயரை பயன்படுத்துவது எனக்கு பிடிக்காது. ஜோதிடம் பார்த்து தான் இப் பெயரை நான் சூட்டிக்கொண்டேன்