தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் முன்
அனுமதியின்றி விடுமுறை எடுத்து போராட்டம் நடத்தினர் திமுக தேர்தல் வாக்குறுதிகளை உறுதியளித்த திமுக அரசு
தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் ஒரு நாள்
அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கல்வி
மாவட்டத்தில் கயத்தார், புதூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஐந்து யூனியன்களில் துவக்கப்பள்ளிகளில் 1745
ஆசிரியர்கள் ஆசிரியைகள் உள்ளனர்.68 பேர்முன்அனுமதி பெற்றுவிடுமுறைஎடுத்து455ஆசிரியர்கள் முன்அனுமதியின்றி
விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டாலும்மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.இதில் கோவில்பட்டிபுதுரோடுநகராட்சிநடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் வராததால் மாணவி ஒருவர் பாடம் எடுத்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 27.50 சதவீதம் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மட்டுமே முன் அனுமதி இன்றி விடுமுறை
எடுத்து போராட்டத்தில்ஈடுபட்டனர் என கூறப்படுகிறது
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.மாணவி ஒருவர் பாடம் எடுத்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






