சேரன்மகாதேவி-பத்தமடை சாலையில் வனவிலங்குகளால் தொடர் விபத்து
வீரவநல்லூர், அக்.11:
சேரன்மகாதேவி- பத்தமடை சாலையில் வனவிலங்குகளால் தொடர்ச்சியாக ஏற்படும் விபத்தினை தடுக்க அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்காதது பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேரன்மகாதேவி-பத்த மடை சாலையில் சேரன்ம காதேவி ரவுண்டானா முதல் ஸ்காட் பொறியி யல் கல்லூரி வரையிலான பகுதியானது மிளா நட மாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் சாலையின் குறுக்கே திடீ ரென பாயும் மிளாவினால் தொடர்ச்சியாக விபத்து கள் நடந்து வருகிறது. மிளா குறுக்கே பாய்ந்ததில் கடந்த மார்ச், 20ல் திருச்சியிலிருந்து ரம்ஜான் விடுமுறைக்குவந்த சேரன்மகாதேவியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான முகமது ரியாஸ்(21), செப்.10ல் சேரன்மகாதேவியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம்(49) உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளனர். பைக், கார் உள்ளிட்ட பல் வேறு வாகனங்கள் சேதம டைந்துள்ளது.
‘பல மாதங்களாக மலை யடிவாரத்திலிருந்து ஊருக் குள் வரும் மிளாவினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்து நிகழ்ந்து வருகிறது. இதுகு றித்து பலமுறை பொதுமக்கள் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து வரு கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற காரின் மீது மிளா மோதியது. இதில் காரின் முன்பகுதி உருக்கு லைந்த நிலையில் அதிர்ஷ் டவசமாக காரில் பயணம் செய்தவர் காயமின்றி உயிர் தப்பினர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சேரன்ம காதேவி- பத்தமடை சாலை யில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை தடுக்க நிரந்தர வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்ப குதி மக்களின் வேண்டுகோளாகும்.






