‎அரசு பஸ்-லாரி மோதி விபத்து: ‎ ‎காயமடைந்தவர்களுக்கு | அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஆறுதல்

‎நெல்லை, அக்.9-
‎
‎நெல்லையில் இருந்து நேற்று காலையில் பாபநாசத்திற்கு புறப்பட்டு சென்ற அரசு பஸ்சும், சேரன்மாதேவியில் இருந்து நெல்லை நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி யும் மோதிய விபத்தில் கண்டக்டர் அஜித் மெல்வின் ஆர்தர் உயிரிழந்தார். 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
‎
‎இதில் பலரும் அம்பை தொகுதிக்குட்பட்ட சேரன்மகா தேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம் பகு – திகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் மீட் 5 கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அ.தி.மு.க. நெல்லை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மருதூர் – கே.ராமசுப்பிரமணியன் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் செல்வராஜ் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் அமலன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.