2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்து ஏறும் அவலம்
முக்கிய அலுவலகங்கள் இருந்தும் பஸ் நிறுத்தம் இல்லாத விநோதம்
சேரன்மகாதேவி செப்டம்பர் 28 சேரன்மகாதேவி புறவழிச்சாலையில் பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்
சேரன்மகாதேவி ரயில்வே ஸ்டேஷன் மேல்புறம் பாளை-அம்பை புறவழிச் சாலையில் ரயில்வே கேட் இருந்தது சுமார் 95 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த ரயில்வே கேட்டினை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் ரயில்வே நிர்வாகம் மூடியது இந்த ரயில்வே கேட்டிற்கு தென்புறம் அசோக் நகர், சத்தியமூர்த்தி நகர்,ஜெயா நகர், நேதாஜி நகர், பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ரயில்வே கேட்டிற்கு தென்புறம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி, சப் கலெக்டர் பங்களா, யூனியன் அலுவலகம், ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், தீயணைப்பு நிலையம் என பல்வேறு அரசு அலுவலகங்களும் வடபுறம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் நூற்றுக்கணக்கான அரசு அரசு அலுவலர்களும் உள்ளனர்.
இப்பகுதி மக்கள் மருத்துவ கல்வி பேருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் இந்த ரயில்வே கேட்டினை கடந்து சென்று சேரன்மகாதேவி ஊருக்குள் வந்து சென்றனர், இந்நிலையில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் தென்பகுதி மக்கள் மற்றும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் அலைக்கழிக்கப்பட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களாக இப்பகுதி மக்கள் பேருந்து வசதிக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் அடிப்படை தேவைகளுக்காகவும் புதிய பாலத்தை சுற்றி 2 கிலோமீட்டர் தூரமும் வீணாக அலைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி சேர்மாதேவி புறவழிச் சாலை யில் புதிய பஸ் ரூட் மற்றும் பஸ் ஸ்டாப் வசதி செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






