புதுடெல்லி: புதிய சாலையின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய இளைஞரை டெல்லி துணை முதல்வர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அரசின் துணை முதல்வராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் பர்வேஷ் வர்மா. திலக்நகர் பகுதியில் பர்வேஷ் நேற்று ஆய்வு நடத்தினார். அந்த பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையை கேமிராவில் படம் பிடித்த ஒரு இளைஞர் அதை அமைச்சரிடம் காட்டி சாலையின் தரம் குறித்து விமர்சித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பர்வேஷ் வர்மா ஆபாச வார்த்தைகளை கூறியபடி இளைஞரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். அவருடன் கட்சி தொண்டர்களும் சேர்ந்து தாக்கினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆம்ஆத்மி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்,பாஜ அமைச்சர் ஒருவர் சாலை அமைப்பதில் உள்ள ஊழலைச் சுட்டிக்காட்டியதற்காக ஒரு இளைஞரை கன்னத்தில் அறைந்துள்ளார்.






